ETV Bharat / bharat

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் பஜன் லால் சர்மா! - ராஜஸ்தான் முதலமைச்சர்

Rajasthan CM Bhajan Lal Sharma: ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பஜன் லால் சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Dec 15, 2023, 1:10 PM IST

ஜெய்ப்பூர்: கடந்த நவம்பர் 25 அன்று ராஜஸ்தான் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 200 தொகுதியில் 199 தொகுதிக்கான தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து, கடந்த டிசம்பர் 3 அன்று எண்ணப்பட்ட வாக்குப்பதிவின்படி, 115 இடங்களை பாஜக கைப்பற்றியது. அதேநேரம், 69 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்தது. மேலும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க, பாஜகவின் மத்திய பார்வையாளர்களான, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சரோஜ் பாண்டே மற்றும் வினோத் தவ்டே ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன்படி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக, முதன் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பஜன் லால் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக சட்டமன்ற ஆலோசனைக் குழு அறிவித்தது. அது மட்டுமல்லாமல், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சர்களாக வித்யாதர் நகர் சட்டமன்ற உறுப்பினர் தியா குமாரி மற்றும் துடு சட்டமன்ற உறுப்பினர் பிரேம் சந்த் பைரவா ஆகியோரும், ராஜஸ்தான் சட்டசபையின் சபாநாயகராக அஜ்மர் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வசுதேவ் தேவனானியும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இதற்கான பதவியேற்பு விழா தனித்துவமிக்க ஆல்பர்ட் ஹால் முன்பாக இன்று (டிச.15) நடைபெற்றது. இதில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா, பஜன் லால் சர்மாவுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல், அம்மாநில ஆளுநர் முன்னிலையில் தியா குமாரி, பிரேம் சந்த் பைரவா ஆகியோர் துணை முதலமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

பிரமாண்டமாக நடைபெற்ற இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய செயலர் ஜே.பி.நட்டா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநில முதலமைச்சர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம்; மூளையாக செயல்பட்ட நபர் கைது.. டெல்லி காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.