பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஆகஸ்ட் 6 முதல் 10ஆம் தேதிவரை குறைந்தபட்சம் 242 குழந்தைகள் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது பெற்றோருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு பெருநகர மாநாகராட்சி விடுத்துள்ள தகவலில், நகரத்தில் கோவிட் பாதிக்கப்பட்டுள்ள 242 குழந்தைகளில், 106 பேர் 9 வயதிற்குள்பட்டவர்கள், 136 பேர் 9 முதல் 19 வயதுக்குள்பட்டவர்கள். இவர்களில் 123 சிறுமிகள் ஆவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை கிட்டத்தட்ட முடக்கிய கரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்படுத்திய பேரழிவிலிருந்து நாடு இன்னும் மீளாத நேரத்தில் இந்தப் பாதிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், கோவிட் மூன்றாம் அலை நாட்டில் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என்ற கருத்தை நிபுணர்கள் நிராகரித்து வருகின்றனர், அதற்கான ஆதாரங்கள் இதுவரை இல்லையென்பது அவர்களின் கருத்து.
கர்நாடகாவில் கடந்த வாரம் முதல் சுமார் 1,500 பாதிப்புகள் பதிவாகியிருந்தன. முன்னதாக மாநில அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.
இதையும் படிங்க : Exclusive: சென்னையில் குழந்தைகள் வலியின்றி சிகிச்சைப் பெற கார்ட்டூன் வார்டு