பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் கொலை குற்றவாளியை கைது செய்ய முற்பட்ட காவலரை அக்குற்றவாளி கத்தியால் தாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மேற்கு டிசிபி (DCP) கூறுகையில், " விஸ்வா எனும் கொலை குற்றவாளியைக் கைது செய்வதற்காக, பெங்களுரூ காவல் துறையினர் இன்று (நவம்பர் 18) அதிகாலை 4:45 மணி அளவில் அந்நகர பதரஹாளி எனும் பகுதிச் சென்றனர்.
அப்போது கைது செய்ய முற்பட்ட காவலரை, அந்நபர் கத்தியால் குத்தி தாக்கியுள்ளார். இதனால் சம்பவ இடத்தில் இருந்த காவலர்கள் இருவர், தற்காப்புக்காக குற்றவாளியை நோக்கி, துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்நபர் காயமடைந்தார்" என்றார்.
காயமடைந்துள்ள காவலர் மற்றும் குற்றவாளி விஸ்வா ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். காவல் துறையின் தகவல்படி, விஸ்வா மீது தற்போது வரை 11 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க: காவிரியில் இரு சிறுவர்கள் மாயம்; உதவி பேராசிரியர் உள்பட 2 பேர் சடலமாக மீட்பு!