பிகார்: மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் வசித்து வருபவர், ராஜூ. இவர் சிறுவயது முதலிலிருந்தே, பெட்டியா பகுதியில் யாசகம் எடுத்து வளர்ந்துள்ளார்.
தற்போது காலம் மாறி, அனைத்தும் டிஜிட்டல்மயமாக இருக்கும் நிலையில், தான் யாசகம் கேட்கும் முறையையும் மாற்றி, டிஜிட்டல் மயமாக்கியுள்ளார்.
டிஜிட்டல் யாசகர்..!
அதாவது கூகுள் பே மற்றும் போன் பே, இ-ஸ்கேனிங் அடங்கிய ஃபிளெக்ஸ் கார்டை கழுத்தில் மாட்டிக்கொண்டு யாசகம் எடுக்கிறார், ராஜூ.
மேலும் அவர் கையில் ஒரு டேப் (Tab) வைத்துள்ளார். இவர் யாசகம் கேட்கும் போது, யாரேனும் சில்லறை இல்லை என்றால், அவர்களிடம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துமாறு கேட்பார்.
ராஜூவிற்கு இந்த யோசனை எப்படி தோன்றியது?
யாசகம் கேட்கும்போது, இவரிடம் சில்லறை இல்லை எனக் கூறி சென்றவர்களால், இந்த யோசனை ராஜூவிற்கு வந்துள்ளது. இதனால் அவர் வங்கிக்குச் சென்று கணக்கைத் தொடங்கியுள்ளார். முதலில் வங்கிக்கணக்கு தொடங்குவதில் பல சிக்கல்களை இவர் சந்தித்தார்.
பொதுவாக வங்கியில் கணக்குத் தொடங்குவதற்கு, ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். இவரிடம் ஏற்கெனவே ஆதார் அட்டை இருந்தது. ஆனால், பான் கார்டு இல்லை. பின்னர் பான் கார்டு கிடைத்ததும், அவர் எஸ்பிஐ கிளையில் கணக்குத் தொடங்கினார்.
காசில்லையா கூகுள் பே பண்ணு
அதன்பிறகு இ-வாலட் தயாரித்து, கியூஆர் குறியீடு கொண்ட அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு யாசகம் எடுக்கத்தொடங்கினார். இதனால் அவரது வருமானம் அதிகரித்துள்ளது.
ராஜூவின் அறிவுத்திறன் குன்றியதால் யாரும் அவருக்கு வேலை கொடுக்கவில்லை என்று அவரே கூறுகிறார். அன்று முதல் பிச்சை எடுத்து வாழத் தொடங்கியுள்ளார். ஆனால், தற்போது அவர் டிஜிட்டல் பிச்சைக்காரராக மாறியதால், வருமானமும் அதிகரித்துள்ளது. இவர்தான் நாட்டின் முதல் டிஜிட்டல் யாசகர்.
ராஜூ தன்னை லாலு யாதவின் தீவிர ரசிகன் எனக் கூறுகிறார். ஒரு காலத்தில், அவர் லாலு யாதவைப் பின்பற்றி, லாலு யாதவின் நிகழ்ச்சிகள் அருகில் எங்கு நடந்தாலும், அங்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
நான் மோடி, லாலு பிரசாத் யாதவின் பக்தன்
லாலு யாதவ் தனக்கு இரண்டு வேளை சாப்பாடுக்கு, பாஸ் ஒன்று கொடுத்ததாகவும் கூறினார்.
அதாவது 2005இல் லாலு பிரசாத் யாதவின் உத்தரவின்பேரில், சப்தக்ராந்தி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸின் பேட்டரி காரில் இருந்து தினமும் ராஜூவிற்கு உணவு வழங்கப்பட்டது.
ஆனால், 2015இல், அந்த பாஸும் ரத்து செய்யப்பட்டு, இப்போது மக்களிடம் யாசகம் கேட்டு பிழைப்பு நடத்த வேண்டிய நிலை ராஜூவிற்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது ராஜூ, தனது தொழில் முறையை டிஜிட்டல்மயமாக்கியுள்ளார். மேலும், இவர், தன்னை மோடியின் பக்தன் எனவும், டிஜிட்டல் இந்தியா மீது தனக்கு அதிகப் பற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேச வளர்ச்சியை தடுத்து நிறுத்திய போலி சமாஜ்வாதிகள் - பிரதமர் மோடி