ETV Bharat / bharat

"அஃப்தாபால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் கொலை" - மேற்கு வங்க பகீர் சம்பவம்! - உடலை 6 துண்டாக போட்ட சம்பவம்

காதலியை கொன்ற அஃப்தாப் பூனவல்லாவால் ஈர்க்கப்பட்டுதான், அதே பாணியில் தந்தையின் உடலை அப்புறப்படுத்த முயன்றதாக பரூய்பூர் கொலை வழக்கில் கைதான ஜாய் தெரிவித்துள்ளார்.

baruipur
baruipur
author img

By

Published : Nov 24, 2022, 7:09 PM IST

பரூய்பூர்: டெல்லியில் அஃப்தாப் என்ற இளைஞர், தனது காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய சம்பவம் அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்குவங்க மாநிலம் பரூய்பூரில் அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடந்தது.

கடந்த 12ஆம் தேதி, ஓய்வு பெற்ற கடற்படை வீரர் உஜ்வல் சக்ரவர்த்தியை, அவரது மனைவி ஷியாமலியும், மகன் ஜாயும் சேர்ந்து கொலை செய்து, உடலை ஆறு துண்டுகளாக வெட்டி, அப்பகுதியில் உள்ள குளம் மற்றும் காட்டில் வீசினர். மதுபோதைக்கு அடிமையான உஜ்வல் சக்ரவர்த்தி, மனைவி மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டபோது இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

பாலிடெக்னிக் மாணவரான ஜாய், தனது கல்லூரியில் பயன்படுத்தும் மர பிளேடால் உடலை கூறுபோட்டதாக தெரிகிறது. இதையடுத்து உஜ்வலின் தலையை மீட்ட போலீசார், கடந்த 18ஆம் தேதி ஷியாமலியையும், ஜாயையும் கைது செய்தனர். கொல்லப்பட்ட உஜ்வலின் கைகள் இன்னும் மீட்கப்படவில்லை. இந்த நிலையில், அஃப்தாப் பூனவல்லாவால் ஈர்க்கப்பட்டு, அதே பாணியில் தந்தையின் உடலை அப்புறப்படுத்த முயன்றதாக ஜாய் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், "தாயும் மகனும் மட்டுமே சேர்ந்து உடலை கூறு போட்டு அப்புறப்படுத்தியது உண்மையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இந்த கொலைச் சதியில் வேறு சிலருக்கு தொடர்பு இருக்க வாய்ப்புள்ளது. கைதான தாய், மகனின் செல்போன் அழைப்புகளை சோதனை செய்து வருகிறோம். கொலைக்குப் பிறகு ஷியாமலி, ஜாய் இருவரும் ஒரு சிலரிடம் மட்டுமே பேசியுள்ளனர்.

ஷியாமலி தனது மூத்த சகோதரனிடம் பேசியுள்ளார். ஜாய், தினமும் தனது காதலியுடன் மணிக்கணக்கில் பேசியுள்ளார். பின்னர், தனது நண்பர்கள் இருவரிடம் மட்டும் பேசியுள்ளார். ஜாயின் நண்பர்களை கண்காணித்து வருகிறோம். உடலை வெட்டுவதற்கு மர பிளேடைப் பயன்படுத்துவது விசித்திரமானது, கொலையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள உளவியல் நிபுணர்களின் உதவியைப் பெறவும் நாங்கள் யோசித்து வருகிறோம்" என்றார்.

கொல்லப்பட்ட உஜ்வல் சக்கரவர்த்தி தனது மகனுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுத்தார் என்றும், மகனை அவனது நண்பர்களுடன் சண்டை போட உற்சாகப்படுத்துவார் என்றும் ஜாய் வீட்டின் அக்கம்பக்கத்தில் குடியிருப்போர் கூறுகின்றனர்.

ஜாயின் பக்கத்து வீட்டுக்காரர் துஷார் சர்க்கார் கூறும்போது, "உஜ்வல் சக்ரவர்த்தி தனது மகனுக்கு பயிற்சி அளித்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஜாய் குழந்தைப் பருவத்திலிருந்தே தனது நண்பர்களுடன் சண்டையிடுவான். ஆனால், அவனது பெற்றோர் கண்டிக்கவில்லை, மாறாக ஊக்குவித்தனர். அதற்கு விலையாக உஜ்வல் தனது உயிரை கொடுக்க நேர்ந்துள்ளது" என்றார்.

மற்றொரு அண்டை வீட்டார் கூறும்போது, "ஜாயின் குடும்பம் அக்கம் பக்கத்தில் குடியிருந்தவர்களோடு நல்ல உறவை கொண்டிருக்கவில்லை. தந்தையும் மகனும் அவ்வப்போது சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆனால், ஜாய் தனது தந்தையைக் கொன்றுவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை. ஜாய் முரட்டுத்தனமான மற்றும் குறுகிய மனநிலை கொண்டவன். அவன் ஆத்திரத்தில் தந்தையை கொன்றிருக்கலாம்" என்றார்.

இதையும் படிங்க: குடிகார கணவரின் தொல்லை - கொன்று 6 துண்டுகளாக்கி வீசிய மனைவி, மகன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.