ETV Bharat / bharat

அமெரிக்காவை அச்சுறுத்தும் பொருளாதார மந்தநிலை! 2008 மீண்டும் திரும்புகிறதா? இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

அமெரிக்காவில் இரு வங்கிகள் அடுத்தடுத்து திவால் என அறிவிக்கப்பட்ட நிலையில், அங்குள்ள மற்ற வங்கிகளும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 12:39 PM IST

ஐதராபாத் : அமெரிக்காவில் சில நாட்கள் இடைவெளியில் அடுத்தடுத்து இரு வங்கிகள் திவாலாகி உள்ளன. கலிபோர்னியா மாகாணம் சான்டாகிளாரா நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த சிலிகன் வேலி வங்கி திவாலானது. அந்த வங்கியின் 17 கிளைகளும் மூடப்பட்டுவிட்டன. வங்கியின் அனைத்து சொத்துகளையும் அமெரிக்க வங்கி ஒழுங்குமுறை அமைப்பு பறிமுதல் செய்துள்ளது.

அதேபோல் சிக்னேச்சர் வங்கியும் திவாலாகி உள்ளன. அந்த வங்கியின் சொத்துகள் பறிமுதல் நிலையில் உள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் இரு பெரும் வங்கிகள் திவாலாகி இருப்பது அமெரிக்க பொருளாதாரத்தை அசைத்து பார்த்து உள்ளது. அமெரிக்க வங்கிகளை நிர்வகிக்கும் பெடரல் வங்கி இதற்கு என்ன பதில் கூறப் போகிறது, 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவை புரட்டிப் போட்ட பொருளாதார மந்தநிலை மீண்டும் வரும் அபாயம் உள்ளதா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்து உள்ளன.

அமெரிக்காவின் இரு வங்கிகள் திவாலானதை அடுத்து சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய வங்கியான கிரெடிட் சுயெஸ், சுவிஸ் முதலீட்டு நிதி நிறுவனமான யுபிஎஸ் (UBS) உடன் இணைந்து நிதி நெருக்கடிகளை சமாளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது. அதேபோல் ஜெர்மனியின் Deutsche வங்கியும் நிதி நெருக்கடி அபாயங்களை தவிர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.

தொடர் வங்கிகள் திவால் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சினைகளால் அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த பொருளாதார மந்த நிலை மீண்டும் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்து உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ள தரவுகளின் படி, வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்டு இருந்த 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றதன் காரணமாகவே சிலிகான் வேலி வங்கி பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர் வங்கிகள் திவால் எதிரொலியால், வங்கிகளில் முதலீட்டாளர்கள் வைத்திருந்த வைப்புத் தொகைகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அதன் காரணமாகவே நிர்வாக சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் வங்கிகள் நிதி நெருக்கடிக்கு தள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத அளவில் அதிகரிக்கும் பணப் புழக்கத்தை குறைக்க கடந்த ஆண்டு முதலாக அமெரிக்க ம்த்திய வங்கியான பெடரல் வங்கி, கடன் வட்டி விகிதங்களில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இருப்பினும் பொருளாதார சுணக்கம் உள்ளிட்ட காரணங்களால் வைப்புத் தொகை திரும்பப் பெறப்பட்டதன் அடிப்படையில் இந்த நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக வல்லரசான அமெரிக்காவில் நிலவும் பொருளதார நெருக்கடி, ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் எப்படி பிரதிபலிக்கும் என்ற அச்சமும் மறுபுறம் மேலோங்கி காணப்படுகிறது. அமெரிக்கா தும்மினால் மற்ற நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் என்ற புனைக்கப்பட்ட தத்துவம் கூறப்படும் நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களை கொண்டு பொருளாதாரத்தை இயக்கி வரும் நாடுகளுக்கும் பொருளாதார சுணக்கம் ஏற்படும் என கூறப்படுகிறது.

வங்கித் துறைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக விரைவில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என கூறப்படுகிறது. அதேநேரம் அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் இந்திய பொருளாதாரம் ஆட்டம் காணுமா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது.

2032 ஆம் ஆண்டிற்குள் உலகின் 3 வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருமாறும் என்றும் 2035 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், தற்போதைய பொருளாதார தேக்க நிலை இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடன், இந்தியா பயணித்து வருகிறது. இதனால் அமெரிகாவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலையில் இந்திய தொழில் துறையும் பாதிப்பை சந்திக்கும் எனக் கூறப்படுகிறது. அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி கணிசமாக அதிகரித்து உள்ளன.

அதனால் எதிர் வரும் பொருளாதார மந்தநிலை இந்திய ஏற்றுமதி துறையை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை இந்திய சமாளித்தது போல் எதிர்வரும் நெருக்கடிகளையும் இந்தியா சமாளிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க : கடத்தல் சிலைகள் மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைப்பு - அமெரிக்க அருங்காட்சியகம் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.