உத்தரப் பிரதேசம்: ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்லிம் என்ற பெண், ரக்ஷா பந்தன் நாளான நேற்று (ஆக.23) இந்தூர் பகுதிகளில் வளையல் விற்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த சிலர், அவரை சமூகரீதியாக தாழ்த்திப் பேசியதாகவும், அதன் தொடர்ச்சியாக அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்நபர் விற்பதற்காக எடுத்துச் சென்ற வளையல்கள், அவர் வைத்திருந்த பணம், அவரது மொபைல் போன் ஆகியவற்றையும் அந்நபர்கள் பிடுங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்த காணொலி ஒன்று முன்னதாக சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு முன்னதாக போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், முன்னதாக, ஆக.20ஆம் தேதி மொஹரம் நாளன்று, உஜ்ஜயினியின் கீதா காலனி பகுதியில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' போன்ற கோஷங்களை எழுப்பியதற்காக ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உஜ்ஜயினி காவல் கண்காணிப்பாளர் சத்யேந்திர சுக்லா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராக்கிக்கு பதில் கல்லீரல்... ரக்ஷா பந்தன் நாளில் தம்பியின் உயிர்காத்த சகோதரிகள்!