புதுச்சேரி: முழு அடைப்பு காரணமாக, தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வர்த்தக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை இயக்கப்படவில்லை.
குறிப்பாக புதுச்சேரி மாநகரில் நேரு வீதி, காமராஜ் சாலை பாரதி வீதி, அண்ணாசாலை மிஷன் வீதி, மறைமலை அடிகள் சாலை, வில்லியனூர் பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பஜார்கள் கடைகள் மூடப்பட்டு உள்ளன.
வெளிமாநிலம் செல்லக்கூடிய தமிழ்நாடு அரசு பேருந்துகள் மாநகருக்குள் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முழு அடைப்பு போராட்டம்
இந்தப் போராட்டமானது, வார்டுகளில் உள்ள குளறுபடிகளை சரிசெய்யாமல் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை கண்டித்தும், சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்களிடம் எந்தவித ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாக தேர்தல் நடத்த முயற்சிக்கும் தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் நடைபெறுகிறது.
மேலும், பண்டிகை காலங்களில் மக்களுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஒத்திவைக்க வேண்டும் எனப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மாநில திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சார்பில் இந்த முழு அடைப்பு போராட்டம் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
இதையும் படிங்க: நிலக்கரி தட்டுப்பாடு: மின் தடை ஏற்பட அதிக வாய்ப்பு