அயோத்தி(உத்தரபிரதேசம்) : அயோத்தியில் 'தீபாவளி' விழாவிற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மணல் கலைஞர்களால ராமாயணக் கதையின் ஒவ்வொரு அத்தியாயங்களையும் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் பல நூற்றாண்டிற்கு முன் கட்டப்பட்ட பாபர் மசூதி இந்துத்துவா அமைப்பினரின் கலவரத்தால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிப் பண்டிகையை பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் வாரணாசியைச் சேர்ந்த மணல் கலைஞர்கள் மற்றும் காசி வித்யாபீட நுண்கலைத் துறை மாணவர்கள் ஆகியோர் இணைந்து ராமாயணத்தின் புகழ்பெற்ற அத்தியாயங்களை மணல் சிற்பங்களாக உருவாக்கம் செய்து வருகின்றனர்.
காசி வித்யாபீடத்தின் நுண்கலை துறை மாணவர் ரூபேஷ் சிங் தலைமையில் 20 பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 நாட்களாக இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் மணல் சிற்பங்களை உருவாக்குவது இது மூன்றாவது முறையாகும் என சிற்பக் கலைஞர் ரூபேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஒவ்வொரு கிராமமும் நாட்டின் முதல் கிராமமாகும் - பிரதமர் மோடி