தெலங்கானா: தெலங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் காட்கேசர் என்ற இடத்தில் நேற்று (மே 29) நடந்த பொதுகூட்டத்தில் தெலங்கானா அமைச்சர் மல்லாரெட்டி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் திடீரென்று மர்ம நபர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைச்சர் காவல்துறையினர் பாதுகாப்புடன் காரில் அனுப்பி வைத்தனர்.
இந்த கூட்டத்தை ரெட்டி கார்ப்பேரஷன் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய அமைச்சர் மல்லாரெட்டி TRS (தெலங்கானா ராஷ்டீரியா சமிதி) கட்சியின் செயல் திட்டங்களை எடுத்து கூறினார். அப்போது கூட்டத்திலிருந்து சிலர் குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் இறங்கி செல்லும் போது சிலர் அவரின் கார் மீது கற்களையும், சேர்களையும் தூக்கி எறிந்தனர். இதனால் காவல்துறை பாதுகாப்புடன் மல்லாரெட்டி எந்தவித பாதிப்பும் இல்லாமல் அனுப்பிவைக்கப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
இதையும் படிங்க:17 கேள்விகளுடன் மோடியை வரவேற்ற டிஆர்எஸ் கட்சி