ETV Bharat / bharat

TODAY HOROSCOPE: செப்டம்பர் 14 இன்றைய ராசிபலன் - horoscope

மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களை காணலாம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Sep 14, 2022, 6:52 AM IST

மேஷம்: சில முடிவுகள் எடுப்பது கடினமாக இருந்தாலும், உறுதியாக இருந்தால், எளிதாக முடிவெடுக்கலாம். உங்களது நோக்கம், உணர்வு ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், முடிவு ஒன்றை எடுத்துவிட்டால், அதில் உறுதியாக இருக்க வேண்டும். உங்கள் முன்னேற்றப் பாதையில், சிறிது நிதானம் தேவை.

ரிஷபம்: இன்று, நிச்சயமாக பயணம் மேற்கொள்ள திட்டமிடுவதற்கான நாள் அல்ல (அது சாதாரணமான விஷயங்களுக்காக என்றாலும் கூட) புதிய திட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம். நீங்கள் உங்கள் காதல் துணையுடன், உல்லாசமாக இருத்தல் அல்லது ஸ்பாவில் இளைப்பாறுதல் போன்றவற்றின் மூலம் சோம்பல் நீங்கலாம். எப்படி இருந்தாலும், உங்களுக்கு செலவு ஏற்படும் நாள் இது.

மிதுனம்: செயல்கள் மற்றும் உணர்ச்சிகள் இடையே சமநிலையை பராமரிக்க நீங்கள் பெரிதும் முயற்சி செய்வீர்கள். அதில் வெற்றி அடையவில்லை என்றாலும் கூட உங்கள் நண்பர்களுடன் நீங்கள் பழகும் போது பெரிதும் ஏமாற்றம் ஏதும் இருக்காது. உங்கள் காதல் துணையுடன் நீங்கள் சிறந்த வகையில் நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் உங்கள் உடல் தோற்றம், உங்களுக்கு சிறிது கவலையை ஏற்படுத்தலாம்.

கடகம்: நீங்கள் புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அவர்களுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். ஆனால் உங்கள் மனதில் கவலை அல்லது பதற்றம் இருக்கும். எனினும், நீங்கள் நண்பர்களுடன், பொழுதைக் கழித்து, மாலையில் கவலையில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்: நீங்கள் உங்கள் வாழ்க்கையில், இத்தனை நாட்களாக சந்திக்க காத்திருந்த ஒரு நபரை, சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கக் கூடும். உங்கள் காதல் துணைக்கு, நீங்கள் அழகான பரிசு ஒன்றையும் அளிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கலையில் ஆர்வம் இருக்கும். அந்த ஆர்வத்தை நீங்கள் வெளிப்படுத்தி, மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.

கன்னி: இன்று, செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.

துலாம்: இன்று, உங்கள் காதல் துணையுடன் நெருக்கமாக பழகுவதற்கான சரியான நாளாகும். அதிக வேலை காரணமாக, நீங்கள் நெடுநாட்களாக, ஒன்றாக நேரத்தை கழிக்க வாய்ப்பு இல்லாமல் இருந்தது. உங்கள் காதல் துணையுடன், மாலையை இனிமையாக கழிப்பீர்கள். நீங்கள் புத்துணர்ச்சியாகவும் உணர்வீர்கள். இன்றைய தினத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவும்.

விருச்சிகம்: இன்று புதிய நடவடிக்கைகளில் ஈடுபட நீங்கள் புத்துணர்ச்சியுடன் தயாராக இருப்பீர்கள். ஆனால், இந்த நடவடிக்கைகள், நீங்கள் எதிர்பார்த்த முறையில் நடைபெறாமல் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எனினும் நம்பிக்கையை கைவிட வேண்டாம். ஏமாற்றம் கொள்ள வேண்டாம். வெற்றி பெறும் வரை தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்று பள்ளியில் கற்ற பாடத்தை நினைவில் கொள்ளவும்.

தனுசு: ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் நீங்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு தொடக்க நிகழ்ச்சியில் நீங்கள் முக்கியமானவராக கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. நெடுந்தூர வர்த்தக பயணம் மேற்கொள்வதற்காக தயார் நிலையில் இருக்கவும்.

மகரம்: நம்பிக்கை என்பதே, வெற்றி என்ற கதவை திறக்கும் சாவியாகும். இன்று, உங்கள் நேர்மறையான மனப்பான்மை மற்றும் நடவடிக்கையின் காரணமாக, வெற்றியை நோக்கி நீங்கள் ஒரு அடி முன்னேறி செல்வீர்கள். நீங்கள் எதையும் அலட்சியப்படுத்தும் நபர் அல்ல. உங்களது சாதனைகளை நீங்கள் மதிப்பீடு செய்து, அறிவார்ந்த முடிவுகளை எடுப்பீர்கள்.

கும்பம்: இன்று, கொண்டாட்டங்களில் பங்கேற்க, வாய்ப்பு ஏற்படும். அது நண்பரின் திருமணம் தொடர்பான தகவலாக இருக்கலாம் அல்லது நீங்கள் புதிய கார் வாங்கும் வாய்ப்பு உள்ளது; அல்லது இன்று உங்கள் வாழ்க்கையை நினைத்து நீங்கள் சந்தோஷம் கொள்ளும் நாளாகவும் இருக்கலாம்! இது தவிர, இன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு சுமுகமாகவே இருக்கும். நீங்கள் வர்த்தகம் அல்லது தொழில் துறையில் இருப்பவர் என்றால், உங்கள் இலக்கை நோக்கி ஒரு அடி முன்னேறுவீர்கள்.

மீனம்: இன்றைய நாள், உங்களுக்கு குழப்பம் நிறைந்த நாளாகவும் நிச்சயமற்ற தன்மை உள்ள நாளாகவும் இருக்கும். இதனால் உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்பட்டு, பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதில் சிரமம் ஏற்படும். சச்சரவில் இருந்து விலகி இருக்கவும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து, உங்களது தினசரி பணியின் மீது மட்டும் கவனம் செலுத்தவும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.