மேஷம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, நீங்கள் தனிமை படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த நீங்கள், முயற்சிகள் பலவற்றை மேற்கொள்வீர்கள். வருங்கால பாதுகாப்பிற்கான அம்சங்கள் என்ன என்பதை ஆராய்வீர்கள். அதனால் நீண்ட காலத்திற்கு வலுவாக இருக்கக்கூடிய உறவினை ஏற்படுத்துவீர்கள்.
ரிஷபம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, உங்களுக்கு சிறிது கடினமான, பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். பின்னடைவுகள் மற்றும் சவால்கள் ஆகியவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கவும். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை எதிர்த்துப் போராடும் உங்களது மனப்பான்மை காரணமாக, அதற்கான தீர்வு கிடைக்கும்.
மிதுனம்: கடந்த கால நினைவுகள், மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் தோன்றும். அதனால் நீங்கள் குதூகலமாக இருப்பீர்கள். அறிவார்ந்த தேடல்களில் ஆர்வம் இருக்கும். உங்களது கடந்த காலம், உங்களது எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தை பாதிக்க ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம்.
கடகம்: இன்று, உங்களுக்கு வேலை செய்யும் ஆர்வம் அதிகம் இருக்கும். ஏதேனும் ஒன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இன்றைய தினத்தில், தோட்டவேலை, சமையல் செய்தல், வீட்டிற்கு விருந்தினரை அழைத்து நேரம் செலவிடுதல் ஆகியவற்றிற்கு சிறந்த நாளாகும். இன்றைய தினத்தில், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், உங்கள் காதல் உறவிற்காக, நேரம், பணம் ஆகியவற்றை செலவழித்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
சிம்மம்: இன்று, பங்குச்சந்தையின் மூலம் நிதி வரவு இருக்கக்கூடும். நீங்கள் முதலீட்டாளர் என்றால், உங்கள் முதலீடுகளுக்கு நல்ல லாபம் இருக்கும். நீண்ட காலம் தீர்க்கப்படாமல் இருந்த கடன்களை தீர்த்து விடுவீர்கள். பொழுதுபோக்கிற்காக பணம் செலவழிக்கும் வாய்ப்பும் உள்ளது.
கன்னி: இன்று, குடும்ப உறவுகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும். அவர்கள் உங்களையும் உங்கள் எண்ணங்களையும் கட்டுப்படுத்துவார்கள். வர்த்தகத் துறையை பொருத்தவரை சாதகமான நிலை இருக்கும். மாலையில் நீங்கள் நிம்மதியாக நேரத்தை கழிப்பீர்கள். நீங்கள் கோயிலுக்கு செல்ல பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.
துலாம்: இன்று, உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். உங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை, உங்களது வாழ்க்கைத் துணை புரிந்து கொள்வார். ஒருவருடன் ஒருவர் இணக்கமாக இருந்து, சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: இன்றைய தினத்தைப் பொருத்தவரை, சிறிது மந்தமான நாளாக இருக்கும். பணியிடத்தில் வேலை பளு அதிகரித்ததன் காரணமாக, சோர்வாக உணர்வீர்கள். சில சமயங்களில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். மனநிலையை மாற்றிக் கொள்ள, நீங்கள் உங்கள் காதல் உறவுடன், காபி அருந்துவதற்காக, நேரம் செலவழிக்க கூடும்.
தனுசு: சோதனைக் காலங்கள் எப்போதுமே நீடிப்பதில்லை, உறுதியான மனிதர்கள் நிலைத்து நிற்பார்கள். என்பதை மனதில் கொண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்வீர்கள். நேர்மறையான அணுகுமுறையின் மூலம் வாழ்க்கையை எளிமையாக ஆக்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் எற்படும் மனக்கசப்புகளை மனம் திறந்து பேசி சரி செய்வீர்கள்.
மகரம்: உங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு செயல்பட்டால், மேற்கொள்ளும் முயற்சிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். சுருக்கமாக கூறுவதென்றால், உங்களது உணர்வுகள் வெற்றிக்கு தடையாக இருக்கும். அமைதியாக பொறுமையுடன் செயல்பட்டு, நேர்மறையான எண்ணம் கொண்டு இருந்தால், பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
கும்பம்: உங்களது பணியில் உங்களுக்கு மகிழ்ச்சி நிலவும். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ரீதியான வாழ்க்கை இரண்டிற்கும், முக்கியத்துவம் கொடுத்து நடுநிலையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை சாதாரணமாக இருக்கும். ஆனால் சில விஷயங்கள் குறித்த எண்ணம் உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
மீனம்: இன்று நிதி ஆதாயம் அதிகம் இருக்கும். வர்த்தகம் மற்றும் பல்வேறு முதலீடுகளில் இருந்து பணவரவு இருக்கும். சிறந்த வகையிலான பொதுத் தொடர்பு காரணமாக ஆதாயம் இருக்கும். எதிர்பாராத வகையில், முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்வீர்கள்.
இதையும் படிங்க: வார ராசிபலன்: வாழ்க்கையை ரசிக்கத் தயாராகுங்கள்..