திருவனந்தபுரம்: இடதுசாரி கூட்டணி சார்பாக பத்தனம்திட்டா, அருவபுலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்ட ரேஷ்மா மரியம் ராய் (21) காங்கிரஸின் ஆதிக்கம் நிறைந்த 11ஆவது வார்டில் 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அம்மாநிலத்தின் இளம் கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேஷ்மா, இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
பத்தனம்திட்டாவிலுள்ள விஎன்எஸ் கல்லூரியில் பிபிஏ முடித்துள்ள ரேஷ்மா, அம்மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகள் பலவற்றில் உறுப்பினராக இருந்துவருகிறார்.
இவரது தந்தை பி. மேத்யூ ஒரு மர வியாபாரி, தாயார் மினி ராய் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பணிபுரிகிறார். ராபின் மேத்யூ ராய் என்றொரு தம்பி இவருக்கு இருக்கிறார்.
இதையும் படிங்க: உ.பி.,யில் பத்திரிகையாளர் சந்தேக மரணம்!