ETV Bharat / bharat

சட்டமன்றத்தேர்தல்: நாகாலாந்து 82%, மேகாலயா 74%, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்- 74.79% வாக்குகள் பதிவு

author img

By

Published : Feb 27, 2023, 10:20 PM IST

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 82 சதவீத வாக்குகளும், மேகாலயாவில் 74 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன. இதேபோல் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 74.79 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது.

சட்டமன்ற தேர்தல்
சட்டமன்ற தேர்தல்

ஹைதராபாத்: வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் இன்று (பிப்.27) ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மேகாலயாவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ள நிலையில், சோஹியாங் தொகுதியில் வேட்பாளர் உயிரிழந்ததால் அதை தவிர, எஞ்சிய 59 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டன.

காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் வாக்களித்தனர். மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாலை 5 மணி நிலவரப்படி 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாகாலாந்து சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில், ஒரு தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது. இதனால் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி 40 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாஜக 20 தொகுதிகளிலும் போட்டியிட்டன. காங்கிரஸ் 23, நாகா மக்கள் முன்னணி 22, ராம்விலாஸ் பாஸ்வானின் ஜன்சக்தி கட்சி 15 தொகுதிகளிலும் போட்டியிட்டன. மாலை 5 மணி நிலவரப்படி 82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இடைத்தேர்தல்: லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இன்று (பிப்.27) இடைத்தேர்தல் நடைபெற்றது. இதேபோல் தமிழ்நாட்டின் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உட்பட, 6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில், மாலை 6 மணி நிலவரப்படி, 74.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இறுதியாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு கிழக்கில், 74.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி மேற்குவங்கம் சகர்திகி தொகுதியில் 63.43 சதவீத வாக்குகளும், ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கார் தொகுதியில் 62.28 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலம் லும்லா, ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர், மகாராஷ்டிரா மாநிலம் கஸ்பாபேத், சின்ச்வாட் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

தேர்தல் நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: மதுக்கொள்கை முறைகேடு வழக்கு: மணீஷ் சிசோடியாவுக்கு 5 நாள் சிபிஐ காவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.