திஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றுப்படுகையில், தனி மனிதனாக ஒரு காட்டையே உருவாக்கியவர், ஜாதவ் பயேங். எவ்வித தன்னலமும் இன்றி சுமார் 550 ஹெக்டேர் அடர்த்தியான காட்டை உருவாக்கிய இவருக்கு, ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இந்தியாவின் வனமனிதனை அழைப்பு
பிரம்மபுத்திராவை பசுமையாக்கிய ஜாதவ் பயேங்கிற்கு, மெக்சிகோ அரசு அழைப்புவிடுத்துள்ளது. அந்நாட்டை பசுமைக்குடிலாக மாற்றும் திட்டத்தில் கைக்கோர்த்துள்ள பேயங், சுமார் 8 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் மரங்களை நடவு செய்யவிருக்கிறார். இத்திட்டத்தை செயல்படுத்துவதில் வட அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேயங்குடன் இணையவுள்ளனர். வரும் செப்டம்பர் மாதம், இந்தியாவிலிருந்து பேயங் மெக்சிகோ புறப்படவுள்ளார்.
தன்னார்வ அமைப்புடன் ஒப்பந்தம்
இது தொடர்பாக பேசிய ஜாதவ் பேயங்,’வட அமெரிக்காவில் உள்ள ஒரு தன்னார்வ அமைப்புடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். பத்து ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை முடிக்கவேண்டும். ஒப்பந்தப்படி, நான் இன்னும் மூன்று மாதங்களில் மெக்சிகோ செல்லவேண்டும்’ என்றார்.
இதையும் படிங்க: ’லிவ்-இன் உறவு முறை குற்றமல்ல, சட்டவிரோத செயலும் அல்ல’ - உயர் நீதிமன்றம்