அசாம் மாநிலம் திப்ருகார் மாவட்டத்தில் உள்ள சலோனி தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் 133 தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சலோனி தோட்டத்தை கட்டுப்பாட்டு பகுதியாக சுகாதாரத் துறையினர் அறிவித்துள்ளனர். அனைத்து தொழிலாளர்களுக்கும் அறிகுறியில்லாத கரோனா தொற்று பாதிப்பே ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது, அசாமில் 31 ஆயிரம் பேர் கரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.