அஸ்ஸாம் மாநில தலைநகர் கௌகாத்தியில் போலி ராணுவ சீருடையுடன் திரிந்த 11 இளைஞர்களை அஸரா காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இந்த இளைஞர்கள் போலி சீருடையில் லோகபிரியா கோபிநாத் சர்வதேச விமான நிலையத்தின் முன்னாள் காவலர்களைப் போல நின்றுகொண்டிருந்தபோது காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களிடம் விசாரித்ததில், திமான் கிருஷ்ணா என்ற நபர் தன்னை ராணுவ உயர் அலுவலராக அடையாளப்படுத்தி கொண்டு தங்களை ராணுவத்தில் சேர்த்துவிட்டதாகக் கூறி சீருடை அணியுமாறு கூறினார் எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.