அசாம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வேளாண் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்காக தேஸ்புர் பகுதியில் உள்ள தேர்வு மையத்திற்கு ஷார்ட்ஸ் அணிந்து வந்துள்ளார். இதைக் கண்ட தேர்வு மைய அலுவலர்கள் பெண்ணை தடுத்துள்ளனர்.
தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளபோது ஏன் தடுக்கின்றீர்கள் என அவர்களிடம் இளம் பெண் கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக, அவரது உடையை மாற்றிவரக் கூறி அலுவலர்கள் அறிவுத்தியுள்ளனர்.
ஹால் டிக்கெட்டில் இவ்வாறு விதி ஒன்றும் குறிப்பிடவில்லை என பெண் பதில் பேச, முழு பேண்ட் அணிந்து வந்தால்தான் அனுமதி என கறாராக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது பெற்றொர் பெரிய துணியை எடுத்துவந்து பெண்ணின் உடல் மீது போர்த்தி தேர்வு அறைக்கு அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. உடை என்பது பெண்ணின் சுதந்திரம் அதில் கல்வி நிறுவனம் தலையிடுவது சரியல்ல என பலரும் விமர்சனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இணையை தேர்வு செய்யும் உரிமைக்கு மதம் தடை இல்லை - அலகாபாத் உயர் நீதிமன்றம்