அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் தோல்வி அடைந்த நிலையில் அதற்குப் பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில், "2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.
எங்களின் கடுமையான உழைப்புக்குப் பின்னும், பாஜக, பாஜகவின் மதவாத அரசியலை தோற்கடிக்க முடியாதது மிகவும் கவலையளிக்கிறது. எனக்குப் பொறுப்பளித்து நான்கு ஆண்டு காலம் செயல்பட உதவிய கட்சிக்கும் தலைமைக்கும் நன்றி" என எழுதியுள்ளார்.
இதையும் படிங்க: சிறையிலிருந்தே வெற்றி: பாஜக காங்கிரஸை வீழ்த்தி வரலாறு படைத்த அகில் கோகாய்