அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தி அரசு மருத்துவமனைக்கு அருகில் பாஸ்யா என்ற நபர் கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணை குத்த முயற்சித்துள்ளர். இதைக் கண்ட பத்திரிகையாளர் அப்னூர் அலி தாக்குதலுக்குள்ளான அந்தப் பெண்ணைப் பாதுகாக்க முயற்சி செய்தார். அப்போது அந்தப் பெண்ணைத் தாக்கும் முனைப்பில் இருந்த நபர் ஆத்திரத்தில் அலியைத் தாக்கிவிட்டார். இத்தாக்குதலில் அலி பலத்த காயமடைந்தார்.
இது தொடர்பாக அப்பகுதியிலிருந்தவர்கள் காவல் துறையினருக்கு தகவலளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் பாஸ்யாவைக் கைது செய்தனர்.
பலத்த காயமடைந்த அப்னூர் அலியையும், அந்தப் பெண்ணையும் மீட்ட காவல் துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்த அலிக்கு தற்போது கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண் பத்திரிகையாளர் கொலை - பலர் கைது; தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் அதிரடி