ETV Bharat / bharat

Asian Games: நீச்சல் போட்டியில் இறுதி சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா! - ஆசிய விளையாட்டு போட்டிகள்

Asian Games: இந்திய ஆடவர் பிரிவிற்கான 4x100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே இறுதிப் போட்டி இன்று மாலை 6:18 மணிக்கு ஹாங்சோவில் நடைபெறுகிறது.

Asian Games
ஆசிய விளையாட்டு போட்டிகள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:34 PM IST

ஹாங்சோ: இந்திய நீச்சல் வீரர்களான தானிஷ், விஷால் கிரிவால், ஆனந்த், ஸ்ரீ ஹரி நட்ராஜ் ஆகியோர் இணைந்து ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்திய அணியினர் தேசிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய அணி ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டியில் முந்தைய சாதனையாக 3:23.72 விநாடிகள் வைத்திருந்தன. தற்போது அதை முறியடிக்கும் விதமாக இன்றையப் போட்டியில் 3:21.22 விநாடிகள் பெற்று இந்திய நீச்சல் வீரர்கள் சாம்பியன் ஷிப் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

நீச்சல் வீரர்களான தானிஷ், ஆனந்த் மற்றும் ஸ்ரீ ஹரி ஆகியோர் கடந்த 2019ல் நடைபெற்ற ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ போட்டியில் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ போட்டியில் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்திய அணியினர் ஹீட் 2 சுற்றில் சீனா, ஜப்பானுக்கு அடுத்தப்படியாக இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

  • 🏊‍♂️NATIONAL RECORD ALERT🇮🇳

    The Men's 4x100m Freestyle Relay Team, featuring @srihari3529, @tanishgeorge, Vishal Grewal, and Anand Shylaja, shattered the old National Record with a stunning time of 3:21.22 in the Heats, leaving their mark on the pool and making the nation proud!… pic.twitter.com/7z0zZo7Rm7

    — SAI Media (@Media_SAI) September 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ஒட்டுமொத்தமாக சீனா, சிங்கப்பூர், ஜப்பான், தென்கொரியாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 5ஆவது இடத்தை பிடித்துள்ளது.இந்திய நீச்சல் வீரர்களான ஸ்ரீஹரி நட்ராஜ், லிகித் செல்வராஜ், சஜன் பிரகாஷ், தானிஷ் மேத்யூ ஆகியோர் ஆசிய விளையாட்டு நீச்சல் போட்டி ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ ரிலேவில் இந்திய அணியினர் போடியம் ஃபினிஷைத் தவறவிட்டு 4 x 100 மீ ரிலேவில் 3:40.84 விநாடிகள் கடந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர்.

ஆடவர் பிரிவிற்கான 4 x 100 மீ ஃப்ரீஸ்டைல் ரிலே இறுதிப் போட்டி இன்று மாலை 6:18 மணிக்கு ஹாங்சோவில் தொடங்க உள்ளது. பெண்களுக்கான 4 x 200 மீ ஃப்ரீஸ்டைல் ரிலேவில் இந்திய அணியினர் ஹீட்ஸ் சுற்றில் 8:39.64 நிமிடங்களில் எட்டாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். பெண்களுக்கான இறுதி போட்டி மாலை 6.36 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க:Asian Games : துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்! ஆடவர் அணி அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.