ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் ஐஐடியில் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 70 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஐஐடி நிர்வாகம் வெளிட்டுள்ள செய்தியில், "மார்ச் 11ஆம் தேதி ஐஐடிக்கு வந்த சில மாணவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதன் காரணமாக பிற மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என மொத்தம் 70 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
55க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 10க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். ஐஐடியின் தொற்று கண்டறியப்பட்ட ’பிளாக் ஜி-3’ மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானோர் சண்டிகர், குஜராத், ஜெய்ப்பூரிலிருந்து வந்தவர்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரசோதனைக்காக 2000 ஆய்வகங்கள்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்