டெல்லி: அக்னிபத் வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள் மற்றும் பலன்களை மேற்கூறிய வங்கிகள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். கூடுதலாக, பணியிலிருந்து வெளியேறும் அக்னிவீரர்களுக்கு தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்த கடன்கள் வழங்கவும் இந்த வங்கிகள் முன்வர உள்ளன.
ஜூன் மாதம் மத்திய அரசு ராணுவத்தில் ’அக்னி பத்’ எனும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இது 17.5 வயது முதல் 21 வயது நிரம்பிய இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டும் ராணுவத்தில் பணிபுரியச் செய்யும் திட்டமாகும். அன்மையில் வயது வரம்பு 23ஆக அதிகரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் தொகுதி அக்னிவீரர்கள் ஜனவரி 2023-க்குள் பயிற்சி மையங்களில் சேருவார்கள்.
இதையும் படிங்க: பட்டியலின வன்கொடுமை வழக்கு -உ.பி. குடும்பம் கருணைக்கொலை செய்ய கோரிக்கை