இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே ஐந்து நாள் பயணமாக வங்க தேசத்திற்குச் சென்றுள்ளார். இந்தப் பயணமானது, பாதுகாப்பு ஒத்துழைப்பு, இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக, கடந்த மார்ச் 26ஆம் தேதி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, வங்க தேசம் சென்றிந்தார். அப்போது, இந்தியா-வங்கதேச நாடுகளிடையே வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 2ஆம் டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிரதமர்