ETV Bharat / bharat

ராணுவத்தில் சேரத்துடித்த கபடி வீரர் தற்கொலை - 'அக்னிபத் திட்டமே' காரணம் என குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

ராணுவத்தில் சேர்வதற்காக ஏழு ஆண்டுகளாக பயிற்சி செய்துவந்த கபடி வீரர், அக்னிபத் திட்ட அறிவிப்பு காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Agnipath
Agnipath
author img

By

Published : Jun 20, 2022, 6:02 PM IST

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம், பரத்பூர் மாவட்டம், பிலோதி என்ற கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கண்ணையா(22). கடந்த ஏழு ஆண்டுகளாக ராணுவத்தில் சேர்வதற்காக தீவிரமாக முயற்சித்து வந்தார்.

அதற்காக நாள்தோறும் தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்தார். இதனிடையே மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்த அறிவிப்பு கண்ணையாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் வீரர்களில் 25 விழுக்காட்டினர் மட்டுமே ராணுவத்தில் நிரந்தரப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

75 விழுக்காடு வீரர்கள் ஓய்வூதியம் உள்ளிட்டப் பலன்கள் ஏதுமின்றி அனுப்பப்படுவார்கள் என்ற செய்தி அறிந்து கண்ணையா மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்த நிலையில், கண்ணையா இன்று(ஜூன் 20) காலை தனது கிராமத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

கண்ணையா தேசிய அளவிலான கபடிப் போட்டிகளில் விளையாடியவர் என்றும், அக்னிபத் திட்டம் குறித்து தெரிந்தது முதலே உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டு, விரக்தியில் மூழ்கிவிட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கண்ணையா ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் தங்களது குடும்பத்தின் கனவாக இருந்தது என்றும், அவரது தற்கொலைக்கு அக்னிபத் திட்டமே காரணம் என்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: அக்னிபத் திட்ட ஆள்சேர்ப்பு - விதிமுறைகள், நிபந்தனைகள் என்னென்ன...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.