இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலத்தின் உள்ள பிரோஸ்பூரில், எல்லைப் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு பயங்கரவாத நடமாட்டம் இருப்பதாக கிடைத்த துப்பின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில், ஏகே 47 ரக துப்பாக்கிகள், ரைபிள் துப்பாக்கிகள், ஐந்து பிஸ்டல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, பல முறை இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடந்த திங்கள் கிழமை எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பறந்துகொண்டிருந்த ட்ரோனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 242 இந்தியர்களுடன் சுமியிலிருந்து டெல்லி வந்த சிறப்பு விமானம்