கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிவடைந்தது. இதில், 80க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம் அடைந்தனர். அவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல முயற்சிகளின் ஈடுபட்டுவருகின்றனர்.
டெல்லியின் எல்லை பகுதிகளில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விவசாயிகளுடன் போர் தொடுக்கிறீர்களா..? எனப் பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, விவசாயிகளுக்கு பாலமாக இருக்க வேண்டுமே தவிர தடைக்கல்லாக இருக்க கூடாது என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
-
प्रधानमंत्री जी, अपने किसानों से ही युद्ध? pic.twitter.com/gn2P90danm
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">प्रधानमंत्री जी, अपने किसानों से ही युद्ध? pic.twitter.com/gn2P90danm
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 2, 2021प्रधानमंत्री जी, अपने किसानों से ही युद्ध? pic.twitter.com/gn2P90danm
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 2, 2021
டெல்லியுடனான உத்தரப் பிரதேச எல்லை பகுதியில் தடுப்பு வேலி அமைத்து விவசாயிகளை உள்ளே நுழைய முடியாதவாறு செய்துள்ளனர். டெல்லி - ஹரியானா எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கிடையே இரும்பு கம்பியை இணைந்து போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை மேலும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அரசு, விவசாய சங்கங்களுக்கிடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தாலும், அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாமலும் இழுபறியிலேயே தொடர்கிறது.