ETV Bharat / bharat

ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை மற்றும் ஆஃபர்கள் என்ன? - ஐபோன்களின் மேமரா

Apple Iphone 15 offer price: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஆப்பிள் ஐபோன் 15-இன் (Apple Iphone 15) விற்பனை இன்று முதல் துவங்கியதை அடுத்து, மும்பையில் உள்ள இந்தியாவின் முதல் ஆப்பிள் ஐ பிளானெட்டில் (I planet) வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

Iphone sales price in India
Iphone sales price in India
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 10:14 PM IST

சென்னை: கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் "வொண்டர்லஸ்ட்" (Wonderlust) நிகழ்ச்சியில், ஐபோன் 15 சீரிஸ் வகைகள் மற்றும் ஆப்பிள் வாட்ச் வகைகளையும் வெளியிட்டது. இது ஆப்பிள் வாடிக்கையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முன்னதாக ஆப்பிள் ஐபோன்களில் Type-C ரக சார்ஜர்கள் கொண்டு வருவது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஐபோன் 15 ரகத்தில் அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதில் டைனமிக் ஐலாண்டு (Dyanamic Island) அமசம் ஐபோன் 15 சீரிஸில் உள்ள அத்தனை வகை ஐபோன்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஐபோன் 15-இல் OLED ரக ரெட்டினா டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இதில் பொருத்தப்பட்டுள்ள டிஸ்பிளே மூலம், டால்பி தரத்தில் படங்களை காண முடியும் என கூறப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளே தரம் ஐபோன் 14 விட, ஐபோன் 15-இல் உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே, ஐபோன்களின் மேமராவின் தெளிவு அனைவரையும் பிரமிக்க வைக்கும் விதத்தில் இருக்கும். இந்நிலையில் ஐபோன் 15-இல் கேமராவின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ரக ஐபோன்களில் உள்ள கேமராக்கள் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது.

அதில் 48 மெகாபிக்ஷல் திறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், நிறங்களை தத்ரூபமாக படம் பிடிக்க உதவும் வகையில் மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், போர்ட்ரெட் (Portrait) ரக புகைப்படங்கள் எடுக்கவும் அதி நவின மென்பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், போனின் எடை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக தனிச்சிறப்பான உலோகங்களால் உருவாக்கப்படுள்ளது. குறிப்பாக, டைட்டானியம் ரக உலோகங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஐபோன் 15 ரக ஐபோன்கள் மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, பிங்க் போன்ற நிறங்களில் வெளியிட்டுள்ளது.

உலக அளவில் வெளியாகும் ஐபோன்களின் விலை பெரும்பாலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாற்றம் அடையும், அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் அறிவிப்பின்படி, இன்று முதல் இதன் விற்பனை துவங்கியுள்ளது. இதனை அடுத்து மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட, இந்தியாவின் முதல் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையத்தின் முன்பு ஏராளமான வாடிக்கையளர்கள் குவிந்தனர்.

ஐபோன் 15 வரிசையின் இந்திய விலை பட்டியல்:

ஐபோன் 15 இந்திய விலை:

  • ஐபோன் 15 (128 ஜிபி) : ரூ.79,900
  • ஐபோன் 15 (256 ஜிபி) : ரூ.89,900
  • ஐபோன் 15 (512 ஜிபி) : ரூ.1,09,900

ஐபோன் 15 பிளஸ் இந்திய விலை:

  • ஐபோன் 15 பிளஸ் (128 ஜிபி) : ரூ.89,900
  • ஐபோன் 15 பிளஸ் (256 ஜிபி) : ரூ.99,900
  • ஐபோன் 15 பிளஸ் (512 ஜிபி) : ரூ.1,19,900

ஐபோன் 15 ப்ரோ இந்திய விலை:

  • ஐபோன் 15 ப்ரோ (128 ஜிபி) : ரூ.1,34,900
  • ஐபோன் 15 ப்ரோ (256 ஜிபி) : ரூ.1,44,900
  • ஐபோன் 15 ப்ரோ (512 ஜிபி) : ரூ.1,64,900
  • ஐபோன் 15 ப்ரோ (1 டிபி) : ரூ.1,84,900

ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் இந்திய விலை:

  • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி): ரூ.1,59,900
  • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி): ரூ.1,79,900
  • ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி): ரூ.1,99,900

மேலும் ஐபோன் ப்ரோ ரகங்களில் A17 எனப்படும், அதிவேகத் திறன் கொண்ட அதிநவீன சிப் பொருத்தப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக ஐபோன் ப்ரோ ரகங்களில் வழக்கமான ரிங்கர் ஸ்விட்சை நீக்கிவிட்டு, தனிச் சிறப்புகள் கொண்ட "அக்ஷன் பட்டன்" எனப்படும் ஒரு பட்டன் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் ஐபோன்களுக்கான ஆஃபர்கள்: ஆப்பிள் ஐபோனின் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ரகங்களுக்கு,ஹெச்டிஎப்சி வங்கி அட்டையை பயண்படுத்தினால் 6,000 ரூபாய் வரை தள்ளுபடியும், இதர ஐபோன் 15 ரகங்களுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மேலும், ஐபோன் 14 ரகங்களுக்கும், 13 ரகங்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: வி.ஐ.டி பல்கலை அறிவுசார் திருவிழா.. இந்தியா தொழில்நுட்ப அறிவியலில் வளர்ந்து வருவதாக அனுஜ் பல்லா பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.