அமலாபுரம்: ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் நேற்று (மே 24) ஆந்திர போக்குவரத்து துறை அமைச்சர் பி விஸ்வரூப்பின் வீடு மற்றும் காருக்கு கும்பல் ஒள்று தீவைத்துள்ளது. இதனால் அமலாபுரத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அரசு உடைமைகளான பேருந்து மற்றும் அரசு கட்டடங்களுக்கும் தீ வைத்தது. இந்த கலகத்தில் ஈடுபட்டவர்கள் கோனசீனா சனாதனாசிமிதி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமலாபுரம் அரசு மருத்துவமனை மற்றும் காவல்துறை ஜீப் என அனைத்தையும் போராட்டக் கும்பல் சேதப்படுத்தியது. இதனையடுத்து அப்பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டது. அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தார் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக காவல் உயர் அதிகாரி தெரிவித்தார்.
போராட்டத்திற்கான காரணம்: ஆந்திரா மாநிலத்தின் சட்டசபையில் சென்ற ஏப்ரல் 4 அன்று கோதாவாரி மாவட்டத்தில் இருந்து புதியதாக கோணசீமா என்ற புதிய மாவட்டம் பிரித்து உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்திற்கு பி ஆர் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் என பெயரிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த வன்முறை சம்பவங்களுக்கு பின்னால் கோணசீனா சனாதனாசமிதி அமைப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:அரிசி கடத்தலை தடுக்க முதலமைச்சரிடம் சந்திரபாபு கோரிக்கை!