மும்பை: இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஹர் கர் திரங்கா' பிரசாரத்தின் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள அவர்களது இல்லத்தில் தேசியக் கொடியை ஏந்தி, வெளியில் வந்து, மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 76ஆவது சுதந்திர தினத்தன்று, அனுஷ்கா இன்ஸ்டாகிராமில் அவரது கணவர் விராட் கோலியுடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
அதில், இருவரும் தேசிய கொடியின் முன் நின்று கொண்டிருக்கின்றனர்.
"எங்கள் சுதந்திரத்தின் 75 ஆண்டுகளைக் கொண்டாடுகிறோம். உலகெங்கிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்," என அனுஷ்கா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். கோலியும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
-
75 glorious years. Proud to be an Indian. Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳
— Virat Kohli (@imVkohli) August 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">75 glorious years. Proud to be an Indian. Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳
— Virat Kohli (@imVkohli) August 15, 202275 glorious years. Proud to be an Indian. Happy Independence Day to all. Jai Hind. 🇮🇳
— Virat Kohli (@imVkohli) August 15, 2022
கோலி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மற்றும் ட்விட்டரில், "75 புகழ்பெற்ற ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியனாக இருப்பதில் பெருமைகொள்கிறேன். அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். ஜெய் ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளார்.
இதனையடுத்து பிரதமர் மோடியின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தின் சார்பாக அவர்களது வீட்டில் தேசியக்கொடியைப் பறக்க விட்டுள்ளனர்.
இதையும் படிங்க:ராமோஜி ஃபிலிம் சிட்டியில் தேசிய கொடி ஏற்றினார் ராமோஜி ராவ்