கோவிட்-19 பாதிப்புக்கு பல்வேறு மருந்துகள் நோயாளிகளின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகின்றன. மருந்து நிறுவனங்கள் பல்வேறு புதுமையான சோதனை முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
ட்ரம்பிற்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் மருந்து
கடந்த ஆண்டு, முந்தைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு அந்நாட்டு மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், ரோச்சே நிறுவனம் தயாரித்த ஸ்பெஷல் காக்டெயில் மருந்தை வழங்கியது.
12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த மருந்தை வழங்கலாம் எனவும், ஆரம்பக்கட்ட பாதிப்பு நிலையில் இந்த மருந்தை வழங்கினால் இது மருத்துவமனையில் சிகிச்சைப் பெறும் காலத்தைக் குறைத்து, உயிரிழப்பை 70 விழுக்காடு வரை குறைக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விலை என்ன?
இந்த கோவிட்-19 காக்டெயில் மருந்து தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ரோச்சே நிறுவனமும் சிப்லா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த மருந்தின் அவசரப் பயன்பாட்டிற்கு, இந்தியாவில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இதன் ஒரு டோஸ் விலையானது 59,750 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டுக்குத் தப்பியோடிய வைர வியாபாரி ’மெகுல் சோஸ்கி’ காணவில்லை!