ETV Bharat / bharat

வெறுப்புப் பேச்சு: ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கேள்வி எழுப்பிய ஓவைசி - பாஜக குறித்து ஒவைசி

ஜந்தர்மந்தரில் பாஜகவினர் சிறுபான்மையினருக்கு எதிராக கோஷம் எழுப்பியதற்கு அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Asaduddin Owaisi
Asaduddin Owaisi
author img

By

Published : Aug 10, 2021, 1:18 PM IST

டெல்லி: ஜந்தர்மந்தரில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்த நிலையில், பாஜக பிரமுகர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய இஸ்லாமியர்களின் அரசியல், சமூக, பொருளாதார எதிர்காலம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகையில் தனது கண்டனத்தைப் பதிவுசெய்தார்.

அவர் பேசுகையில், "ஆர்எஸ்எஸ் தலைவர் இந்தியாவில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் ஒரே மரபணுவைக் கொண்டவர்கள் என்கிறார். ஆனால் டெல்லி ஜந்தர்மந்தரில் இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கோஷம் எழுப்பப்படுகிறது. இதற்கு அவர் என்ன பதில் சொல்லப் போகிறார்.

பாசிசம் தற்போது உச்சத்தில் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் அடிக்க உரிமை இல்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட நாங்கள் தயாராக இல்லை. தற்காப்புக்கு எங்களுக்கும் உரிமை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க: காஷ்மீர் கீர் பவானி கோயிலில் ராகுல் காந்தி வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.