திருப்பதி (ஆந்திரா): ஆந்திரா மாநிலத்தில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர் திருக்கோவில் மலை மேல் செல்லும் நடைபாதையில் மேலும் ஒரு சிறுத்தை சிக்கியது பக்தா்கள், பொது மக்கள் இடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உலக பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அலிபிாி நடைபாதை வழியாக லகஷ்மி நரசிம்ம கோவில் அருகே சிறுத்தை தாக்கியத்தில் லகஷிதா என்ற 6 வயது சிறுமி உயிாிழந்தாா்.
இதனையடுத்த சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலை பாதைகளில் பல்வேறு இடங்களில் கோமராக்கள் பொருத்தப்பட்டும், 4 இடங்களில் கூண்டுகள் அமைத்தும் வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு சிறுத்தை ஒன்று வனத்துறையினரிடம் பிடிப்பட்டது. தற்போது இன்று சிறுமியை தாக்கிய லகஷ்மி நரசிம்ம கோவில் பகுதியில் மற்றொரு சிறுத்தை பிடிப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி வரும் பக்தா் மலைக்கு நடைபயணமாக செல்ல அச்சம் அடைந்துள்ளனா்.
திருப்பதி வெங்கடேஸ்வர் திருக்கோவிலுக்கு மலை பாதை வழியாக நடைபயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு கம்புகள் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மரம் ஏறி அட்டகாசம்... வாகன ஓட்டியை மிதிப்பேன் என மிரட்டும் யானையின் வீடியோ வைரல்!