பெங்களூரு: கர்நாடகாவின் துமகுரு மாவட்டத்தில் உள்ள சிக்கநாயக்கனஹள்ளி என்ற பகுதியில் அங்கன்வாடி ஒன்று செயல்படுகிறது. அந்த அங்கன்வாடியில் மூன்று வயது குழந்தை அடிக்கடி, தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்ததாகவும், அதனால் அங்கிருந்த ஆசிரியர் அச்சிறுவனை தொடர்ந்து கண்டித்ததாகவும் தெரிகிறது.
இருப்பினும், அந்தச் சிறுவன் மீண்டும் அவனது ஆடையிலேயே சிறுநீர் கழித்ததைத்தொடர்ந்து, அங்கன்வாடி ஆசிரியர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் இருவரும் சேர்ந்து தீக்குச்சியைக் கொண்டு சிறுவனின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், அச்சிறுவனுக்கு பிறப்பு உறுப்பிலும், தொடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தை உரிமை பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் கிராமத்திற்கு விரைந்தனர். மேலும், சிறுவனின் பெற்றோர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அங்கன்வாடி ஆசிரியர், அங்கன்வாடி உதவியாளர் ஆகியோருக்கு அந்த தாலுகாவின் மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அலுவலர்கள் சம்மன் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: காளி திரைப்பட சர்ச்சை... லீனா மணிமேகலைக்கு புதிய சம்மன்...