அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கன்னாவரத்தை சேர்ந்தவர் நாகபூஷணம். இவர் உள்ளூர் தேவாலயத்தில் பாஸ்டராக உள்ளார். இந்த தேவாலயத்தில் கடந்த வாரம் நடந்த ஜெப கூட்டத்தின்போது, தான் 10 நாட்களில் உயிரிழந்துவிடுவேன் என்றும் அதன்பின் 3 நாட்களில் மீண்டும் உயிர்த்தெழுவேன் என்றும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், ஊர் மக்களிடமும், குடும்பத்தாரிடமும் இதையே சொல்லி வந்துள்ளார். இதனால் கிராம மக்களும், குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், அவருக்கு சொந்தமாக கொல்லனப்பள்ளியில் உள்ள நிலத்தில் அடக்கம் செய்வதற்கான குழியையும் தோண்டி மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதோடு பிளக்ஸ் அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கன்னவரம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து அந்த கிராமக்கள், நாகபூஷணத்திற்கு மனநலம் சரியில்லை, அவருக்கு மனநல ஆலோசனை தேவை. இவருக்கு 2 மகள்களும் மனைவியும் உள்ளனர். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும். சொன்னதையே சொல்லிவருகிறார் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆந்திர விபத்து - பேருந்து காலில் நின்றதால் உயிரிழந்த பெண்