சில தினங்களுக்கு முன்பு, கர்நாடகாவைச்சேர்ந்த விவசாயி ஒருவர் கார் வாங்க மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக பரவி வந்தது.
இதையடுத்து மஹிந்திரா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'எங்களின் நோக்கம் சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் எழுச்சி பெறச் செய்வதே.
மேலும் தனி நபர் கண்ணியத்தினை நிலை நிறுத்துவதாகும். இதில் ஏதேனும் பிரச்னை இருந்தால், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு சரியான பயிற்சியுடன் ஆலோசனையும் வழங்கப்படும்’ என்று தெரிவித்திருந்தது.
அன்று என்ன நடந்தது?
சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவின் துமகுருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமிற்கு விவசாயியான கெம்பே கவுடா சென்றிருந்தார். அவர் பொலிரோ பிக் கார் வாங்க சென்ற போது, அந்த ஷோரூமில் உள்ள விற்பனையாளர் ஒருவர், விவசாயிடம், ’காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய், உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது’ எனக் கூறி, கெம்பே கவுடாவையும் அவரது நண்பர்களையும் அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த கோபமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஷோரூம் பணியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்னை வெடித்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தைக் கொண்டு வருவதாக சவால் விட்டுச் சென்ற கெம்பே கவுடா, மீண்டும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்துள்ளார். மேலும் ஒரே நாளில் காரை டெலிவரி செய்யுமாறும் கேட்டுள்ளார்.
-
And let me add my welcome to Mr. Kempegowda…🙏🏽 https://t.co/BuKnTNov42
— anand mahindra (@anandmahindra) January 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">And let me add my welcome to Mr. Kempegowda…🙏🏽 https://t.co/BuKnTNov42
— anand mahindra (@anandmahindra) January 28, 2022And let me add my welcome to Mr. Kempegowda…🙏🏽 https://t.co/BuKnTNov42
— anand mahindra (@anandmahindra) January 28, 2022
இதையும் படிங்க: சத்தீஸ்கரில் அமர் ஜவான் ஜோதிக்கு அடிக்கல் நாட்டும் ராகுல் காந்தி