டெல்லி: கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்த பழம் பெரும் நடிகரான செளமித்ர சாட்டர்ஜியின் (85) மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
இந்த பதிவில், " தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ஸ்ரீ செளமித்ர சாட்டர்ஜியின் மறைவு பெரும் கவலையை அளிக்கிறது. சிறந்த நடிகராக திகழ்ந்த அவர், நாட்டு மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர் ஆவார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக, கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த செளமித்ர சாட்டர்ஜி, ஒரு மாத கால போராட்டத்திற்கு பின் இன்று (நவம்பர் 15) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 85.
இதையும் படிங்க:
சௌமித்ர சாட்டர்ஜி: சத்யஜித்ரேவின் விருப்பமான நடிகர், வங்காள திரையுலகின் அடையாளம்!