புனே (மகாராஷ்டிரா): கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தெர்கானில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் தனது கைப்பேசியில் திகில் காட்சிகள் நிறைந்த வீடியோவினை பார்த்துள்ளார். பின்னர், விளையாடிக் கொண்டிருந்த இந்த சிறுவன் ஒரு பொம்மையை தூக்கிலிடும் படியாக செய்துள்ளார்.
இதனால், பொம்மை இறந்துவிட்டதாக உணர்ந்த சிறுவனும் தன் முகத்தில் துணியை அழுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் அந்த சிறுவனின் தாய் வேலையில் ஈடுபட்டுள்ள தருணத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம், பிம்ப்ரி-சின்ச்வாட் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வாகாட் காவல்நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளர் சத்யவான் மானே கூறுகையில், “சிறுவன் தனது கைப்பேசியில் திகில் காட்சிகள் நிறைந்த வீடியோவைப் பார்த்து இந்த செயலைச் செய்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த சம்பவம் நன்கு உணர்த்துகிறது” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: செல்போன் கடையில் திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு