அமிர்தசரஸ்: உத்தரப்பிரதேச மாநிலம் உசரா ரசூல்பூர் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் சவுத்ரி என்ற ராணுவ வீரர், ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களைப் பாகிஸ்தான் உளவுத்துறைக்குக் கொடுத்ததாக இந்திய உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர் சவுத்ரி, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் பாகிஸ்தான் உளவு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டதாகவும், அவர்களுடன் இந்திய ராணுவத்தின் முக்கிய தகவல்கள், முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான உளவுத்துறை வழிகாட்டுதலின் அடிப்படையில், அமிர்தசரஸ் போலீசார் அந்த ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த ராணுவ வீரரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த ஒரு இளைஞர் கைது - என்ஐஏ அதிரடி