டெல்லி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவை பிரதமர் நரேந்திர மோடி இன்று( மார்ச் 12) தொடங்கிவைத்தார். இதற்காக குஜராத் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்த மோடி, அங்கு காந்தியின் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார். பின்னர், சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டிக்கு 21 நாள்கள் யாத்திரை நிகழ்வையும் தொடங்கிவைத்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அம்ரித் மஹேத்ஸவ் எனப்படும் நாட்டின் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் முதல் நாள் இன்று(மார்ச் 12) தொடங்குகிறது. 75 வாரங்கள் 75 இடங்களில் இது நடைபெறுகிறது. 75 சிந்தனைகள், 75 சாதனைகள், 75 செயல்திட்டங்கள், 75 உறுதிமொழிகள் ஆகியவற்றை உள்ளிடக்கி சுதந்திரப் போராட்ட விழுமியம் என்பதையும் சேர்த்து ஐந்து தூண்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு நிறுவுவோம். இதன்மூலம், இந்தியாவை முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்லும் பணியில் நாம் பயணிப்போம் என்றார்.
மேலும், நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய திலகர், சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை மறக்க முடியாது. எனவே, மங்கல் பாண்டே, பகத் சிங், நேரு, பட்டேல், அம்பேத்கர் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டும் நாம் முன்செல்லவேண்டும் என்றார்.
இதையும் படிங்க: 'இதுவெறும் ட்ரெய்லர்தான்' - முகேஷ் அம்பானிக்கு குறுஞ்செய்தி