ஜம்மு காஷ்மீரில் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் நரேந்திர மோடியை இன்று (அக் 19) நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். கடந்த 18 நாள்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பொது மக்கள் 11 பேர் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அங்கு வசிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், நேற்று அமித் ஷா மத்திய உளவு அமைப்புகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினர்.
அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை அமித் ஷா ஜம்மு காஷ்மீருக்கு மூன்று பயணம் மேற்கொள்கிறார். சட்டப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் ஜம்மு காஷ்மீருக்கு அமித் ஷா செல்வது இதுவே முதல் முறை. இந்த பயணத்தில் பல்வேறு அறிவிப்புகள் அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: "ராகுல் காந்தி ஒரு போதை அடிமை" கர்நாடக பாஜக தலைவர் பேச்சால் வெடித்த சர்ச்சை