மும்பை : கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஒட்டுமொத்த விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமியிடமாக கொண்டு இயங்கி வரும் விமான போக்குவரத்து நிறுவனம் கோ பர்ஸ்ட். பட்ஜெட் ப்ரீ விமான சேவைகளை வழங்கி வரும் கோ பர்ஸ்ட் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 5வது மிகப் பெரிய ஏர்லைன்ஸ் என பெயர் பெற்றது. இந்த கோ பர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை இந்தியாவின் பழமையான வணிக குழுமமான வாடியா குருப் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோ பர்ஸ்ட் விமான நிறுவனம் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாக கூறப்படுகிறது. விமான நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக்கிக்கும் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை கூட வழங்க முடியாமல் கோ பர்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் திண்டாடி வருவதாக கூறப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் Pratt & Whitney விமான நிறுவனத்திடம் இருந்து என்ஜின்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், குறித்த நேரத்தில் என்ஜின்கள் டெலிவிரி செய்யப்படாததாலும் இந்த நிதி நெருக்கடிக்கு காரணம் என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. Pratt & Whitney நிறுவனத்தின் என்ஜின் டெலிவிரி தாமதத்தால் ஏறத்தாழ 25க்கும் மேற்பட்ட விமானங்கள் இயங்க முடியாமல் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
விமானங்கள் இயங்காததால் ஏறத்தாழ 10 ஆயிரத்து 800 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கோ பர்ஸ்ட் நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் அரசின் அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் மூலம் நிதி உதவி கிடைத்த போதிலும் அமெரிக்க நிறுவனத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகெட்ட முடியவில்லை என கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
நிதி நெருக்கடி உள்பட பல்வேறு காரணங்களால் மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்வதாக கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது. குறிப்பிட்ட தேதிகளில் முன்பதிவு செய்த அனைத்து பயணிகளுக்கு பணம் திரும்பச் செலுத்தப்படும் என விமான நிறுவனம் தெரிவித்து உள்ளது.
-
#UPDATE | "Go First is facing financial crunch due to non-supply of engines by US-based jet engines manufacturer Pratt and Whitney (P&W) that has forced grounding of more than 50 planes," says Go First official to ANI https://t.co/nMLK7t8z8W
— ANI (@ANI) May 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#UPDATE | "Go First is facing financial crunch due to non-supply of engines by US-based jet engines manufacturer Pratt and Whitney (P&W) that has forced grounding of more than 50 planes," says Go First official to ANI https://t.co/nMLK7t8z8W
— ANI (@ANI) May 2, 2023#UPDATE | "Go First is facing financial crunch due to non-supply of engines by US-based jet engines manufacturer Pratt and Whitney (P&W) that has forced grounding of more than 50 planes," says Go First official to ANI https://t.co/nMLK7t8z8W
— ANI (@ANI) May 2, 2023
அதேநேரம் தொடர் நெருக்கடிகளின் காரணமாக திவால் தீர்மான நடவடிக்கையை மேற்கொள்ளும் நிலைக்கு கோ பர்ஸ்ட் நிறுவனம் தள்ளப்பட்டு உள்ளது. திவால் தீர்வு நடவடிக்கைகளுக்காக தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் கோ பர்ஸ்ட் நிறுவனம் தாமாக முன்வந்து விண்ணப்பம் தாக்கல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திவால் தீர்வு நடவடிக்கை குறித்த தகவலை மத்திய அரசுக்கும், கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விரைவில் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ-விடம் இது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் கோ பர்ஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே நிறுவனத்தின் பங்குகளை விற்க தனியார் முதலீட்டாளர்களிடம் கோ பர்ஸ்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விமான போக்குவரத்து சந்தையில் 8 புள்ளி 4 சதவீத பங்குகளுடன் கோலோச்சி வந்த கோ பர்ஸ் நிறுவனம் இதுவரை 6 ஆயிரத்து 500 கோடி ரூபாயை முதலீடுகள் மூலம் திரட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சரத் பவார் பதவி விலகலுக்கு பாஜக காரணமா?