ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் தராமல் இழுத்தடிப்பு - மூதாட்டியின் உடலை சைக்கிளில் வைத்துக்கொண்டு சென்ற அவலம்!

ஒடிசாவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்துகொடுக்காததால், அவரது தூரத்து உறவினர் மூதாட்டியின் உடலை சைக்கிளில் வைத்து எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

odisha
odisha
author img

By

Published : Jun 18, 2023, 2:05 PM IST

ஒடிசா: சுபர்ணபூர் மாவட்டத்தில் உள்ள பினிகா ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்துள்ளது. நேற்று மாலை மூதாட்டி ஒருவர் உயிர் இறந்த நிலையில், மூதாட்டியின் உடலை வீட்டிற்கு கொண்டு வர சுகாதார நிலைய அதிகாரிகள் சரியான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏனெனில், ஆம்புலன்ஸ் தயார் செய்து தருமாறு தன்னார்வாலர் சத்யா அங்கு பணிபுரியும் மருத்துவரிடம் கோரிக்கை வைத்துள்ளார். காத்திருக்குமாறு கூறிய மருத்துவர் வெகு நேரம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் பின்பு மூதாட்டியின் தூரத்து உறவினரும், தன்னார்வாலரும், மூதாட்டியை வெள்ளை துணியால் மூடி, சைக்கிளில் வைத்துக்கொண்டு செல்லவதை கவனித்து இருக்கிறார்கள். பின், மூவரும் சேர்ந்து மூதாட்டியின் உடலை எடுத்துக் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி.. உடைந்த சைக்கிளை வைத்து விவசாயம் செய்யும் தன்னம்பிக்கை விவசாயி..

பின்பு மூதாட்டியின் உடலை மருத்துவமனையின் பிரதான வாசலுக்கு எடுத்துச்சென்றபோது பார்த்தவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சுகாதார அமைச்சரின் மாவட்ட மருத்துவமனையில் இறந்தவருக்கு சரியான மரியாதை கொடுக்காததும், அவருக்கு சரியான வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்காததுமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்மணி, இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இவரின் தூரத்து உறவினரால் பினிகா ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் ருக்மணிக்கு சிகிச்சை அளித்தனர். கடும் கோடையில், வேலை காரணமாக இவர் நீர்ச்சத்து குறைபாட்டால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். பின்பு இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும், மருத்துவர் இறப்பு அறிக்கையை பெற்று செல்லுமாறு கூறியுள்ளனர். இறந்தவரின் உடல் நீண்ட நேரமாக மருத்துவமனையிலே இருந்தது. ஆம்புலன்ஸ் ஏதும் தயார் செய்து தராததால், இறந்தவருக்கு யாரும் இல்லாத காரணத்தினால் தன்னார்வாலரால் சைக்கிளில் எடுத்துச் செல்லப்பட்டது. இது போன்ற பரபரப்பு சம்பவம் நிகழ்ந்தாலும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் யாரும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சம்பவம் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இதையும் படிங்க: இலங்கையிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்... சினிமா பாணியில் பறிமுதல் செய்த அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.