சான்பிரான்சிஸ்கோ: அமேசான் நிறுவனம் விலைகளை உயர்த்தி, லாபத்தை அதிகரிக்க சட்ட விரோதமான யுக்திகளைப் பயன்படுத்தி உள்ளது என அமெரிக்க கூட்டாட்சி வர்த்தக ஆணையம் (FTC) நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது. அந்த புகாரில், ‘அமேசான் "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" ( Project Nessie) என்ற திட்டம் மூலம் வழக்கத்தை விட அதிகமாக 1 பில்லியன் டாலர் வருமானத்தை சட்டத்திற்கு புறம்பாக எட்டி உள்ளதாகக் கூறி அமேசான் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி வெர்ஜ் கூறியதாவது, முன்னதாக, ‘ஈ-காமர்ஸ் மேஜருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கில் "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" இருப்பது தெரிய வந்தது. அமேசான் ரகசியமாக "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" என்ற திட்டம் மூலம் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது என கூட்டாட்சி வர்த்தக ஆணையம் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடைக்காரர்கள் செலுத்தும் விலைகளை வெளிப்படையாக உயர்த்தும் நோக்கத்துடன் அமேசான் "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" திட்டம் மூலம் ஏற்கனவே அமெரிக்க குடும்பங்களில் இருந்து ஒரு பில்லியன் டாலர்களை பிரித்தெடுத்துள்ளது என்று வெர்ஜ் தெரிவித்து உள்ளது.
இந்த ரகசிய அல்காரிதம் மூலம் தயாரிப்புகளுக்கான விலையை அமேசான் நிறுவனம் அதிகரித்து உள்ளது. இந்த விலையை மற்ற கடைகளும் பின்பற்றும் போது அதனுடைய விலையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இது அமேசானின் நம்ப முடியாத வெற்றியாகும்.
அமேசான் பொது வீழ்ச்சியைப் பற்றி வெளியே அறிந்தவுடன் "ப்ராஜெக்ட் நெஸ்ஸி"யை முடக்கியும், வீழ்ச்சி சரியானதும் மீண்டும் "ப்ராஜெக்ட் நெஸ்ஸி"யை இயக்கி உள்ளதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் புகார் அளித்துள்ளது.
தற்போது "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் இயக்க அமேசான் பரீசிலித்து வருவதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் அளிக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெர்ஜ் கூறியுள்ளது.
இதுகுறித்து அமேசான் செய்தி தொடர்பாளர் வெர்ஜ்க்கு அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், "ப்ராஜெக்ட் நெஸ்ஸி" மூலம் அமேசானின் பழைய விலைகளும் உயர வாய்ப்புள்ளதாக கூட்டாட்சி வர்த்தக ஆணையம் கொடுத்த புகாரை ஏற்க முடியாது எனவும், நெஸ்ஸி மூலம் விலைகள் மிக குறையும். இது வாடிக்கையாளருக்கு மிக பயனளிக்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:"கரோனா பாதித்தவர்களுக்கு எளிதில் மாரடைப்பு" - ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!