ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் ஏப்ரல் 2ஆம் தேதி வீட்டில் தனியாகயிருந்த 7 வயது சிறுமி 3 பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், 3 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. அப்போது காவல்துறை தரப்பில், 72 மணி நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று (ஏப். 29) தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில் மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த பணத்தை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டது. குறிப்பாக இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்து 11 வேலை நாள்களில் முடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார்.
இதையும் படிங்க: "வீட்டில் விடுகிறேன் வண்டியில் ஏறு"... தஞ்சையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்...