ETV Bharat / bharat

'2018' - மலையாளத் திரைப்படம் ஆஸ்கரில் நுழைந்தது எப்படி? - சிறப்பு பார்வை!

2018-Everyone is a Hero: டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 2018 திரைப்படம், 2024க்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுக்கு தேர்வாகியுள்ளது. இப்படத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்க்கலாம்.

2018-Everyone is a Hero
'2018' - மலையாளத் திரைப்படம் ஆஸ்காரில் நுழைந்தது எப்படி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:02 PM IST

சென்னை: ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான திரைப்படம், "2018 - Everyone is a Hero". இந்தப் படம் கேரளாவில் 2018ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு பேரிடரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பின்னணியில் இருந்து வரும் மக்கள், பேரிடரின்போது எவ்வாறு அவற்றை சமாளித்து, அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பது குறித்த கதையாகும்.

ஆஸ்கரில் நுழைந்தது எப்படி? ஆஸ்கர் விருது என்பது உலகில் சிறந்த திரைப்படங்களைச் சேகரித்து கவுரவிக்கப்படும் ஒரு விருது ஆகும். அதற்காக இந்தியா சார்பில் கிரிஷ் கசரவல்லி தலைமையில் 16 பேர் கொண்ட குழு, ஆஸ்கார் விருதுப் போட்டிக்கு அனுப்புவதற்கான படத்தை தேர்வு செய்ய அமைக்கப்பட்டது. அந்தக் குழுவுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, மராத்தி போன்ற மொழிகளில் வெளியான 22 சிறந்த திரைப்படங்கள் அனுப்பப்பட்டன.

அப்படி அனுப்பப்பட்டதில் மலையாளத்தில் வெளியான '2018 Everyone is a Hero' என்ற திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்ப தேர்வாகி உள்ளது. இந்த தகவலை இந்திய திரைப்பட கூட்டமைப்புத் தலைவர் ரவி கொட்டாரக்கரா நேற்று (செப்.27) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

பாக்ஸ் ஆபிஸ் வெற்றி: டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான '2018' திரைப்படம், வெளியாகிய 10 நாளில் சுமார் ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. அதுமட்டுமின்றி, இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாகவும், இதுவரை அதிக வசூல் செய்த முதல் மூன்று மலையாளப் படங்களில் ஒன்றாகவும் இணைந்து சாதனை படைத்தது '2018' திரைப்படம். மேலும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி அதிக வசூலை ஈட்டிய இத்திரைப்படம், ஒடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களைக் கடந்தது எனலாம்.

படத்தின் பின்னணி குழு: 2018 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் மட்டுமின்றி, பல்வேறு பின்னணி குழுவில் வேணு குன்னப்பிள்ளி, சி.கே.பத்மகுமார் மற்றும் ஆன்டோ ஜோசப் ஆகியோரும் உழைத்துள்ளனர். மேலும் படக்குழுவில் டோவினோ தாமஸ், குஞ்சாகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், இந்திரன், சுதீஷ், கிலு ஜோசப், வினிதா கோஷி, அஜு வர்கீஸ், தன்வி ராம், கௌதமி நாயர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

நடிகர் டோவினோ தாமஸ்-க்கு செப்டிமியஸ் விருது: இளம் வயதிலேயே மலையாளத்தில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் டோவினோ தாமஸ். இவர் தமிழில் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது கடந்த மே மாதம் வெளியான '2018' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த நடிகர் என்ற பிரிவில் டோவினோ தாமஸ் செப்டிமியஸ் விருதை பெற்றுள்ளார்.

நிஜத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம்: இப்படம் 2018ஆம் ஆண்டு கேரளாவையே உலுக்கிய சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த சம்பவம் கடந்த 100 ஆண்டுகளில் மிக மோசமான பேரழிவாகக் கருதப்பட்டது. மேலும், இதில் சுமார் 400 பேர் வரை உயிரிழந்துள்ளனர். அப்படி மிகப்பெரிய பேரழிவைத் தந்த இச்சம்பவம் மற்றும் அதன் பிறகு ஏற்பட்ட பின்னடைவு ஆகியவற்றை மையக்கருத்தாக் கொண்டதாக இப்படம் அமைந்தது.

மேலும், அந்தனி ஜோசப்பின் தனிப்பட்ட அனுபவம் மற்றும் அந்த சம்பவத்தில் சிலர் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் கொண்டு உருவாக்கியதாகவும், குறிப்பாக 3 கதாபாத்திரங்களை மட்டும் தனது படத்திற்கு கதையாக எடுத்துக் கொண்டதாகவும் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

அதிகாரப்பூர்வ ஆஸ்கர் நுழைவு: 2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பில் அதிகாரப்பூர்வமாக 2018 திரைப்படம் நுழைந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும், காலநிலை மாற்றம் மற்றும் கடுமையான சமூக சவால்களை எதிர்கொள்ளும் மக்கள் என்ற கருப்பொருளுக்காக இப்படம் தேர்வாகியுள்ளது.

இதையும் படிங்க: Chandramukhi 2: பழனி கோயிலில் நடிகர் ராகவா லாரன்ஸ் சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.