ETV Bharat / bharat

Opposition parties meet postponed : எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைப்பு!

author img

By

Published : Jun 5, 2023, 12:32 PM IST

ஜூன் 12ஆம் தேதி நடைபெற இருந்த அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Patna
Patna

பாட்னா : காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அறிவுறுத்தலை அடுத்து பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ஜூன் 12ஆம் தேதி நடக்க இருந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரு வரிசையில் கொண்டு வரும் பணியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஈடுபட்டு உள்ளார்.

டெல்லி, மேற்கு வங்கம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநில முதலமைச்சர்களை சந்தித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், வரும் ஜூன் 12ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, இடது சாரிகள், பீகார் ராஷ்டிரிய ஜனதா தளம், டெல்லி ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்து இருந்தன.

மேலும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்து இருந்தார். காங்கிரஸ் தரப்பிலும் இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

இந்நிலையில், ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசா மூன்று ரயில்கள் விபத்து காரணமாக உருவான அசாதாரண சூழ்நிலை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்கா பயணம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேறு பணிகளில் ஈடுபட்டு உள்ளதால் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது.

டெல்லியில் மத்திய அரசு கொண்டு அவசரச் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து வருவதால், அவரும் ஜூன் 12ஆம் தேதி நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் எனக் கூறப்படுகிறது.

பல்வேறு காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : Odisha Train Accident: ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் விபத்து.. தடம் புரண்ட சரக்கு ரயிலால் சேவை பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.