மேற்கு வங்கம்: தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள், வழிமுறைகள் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துவதாக திருணமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சி எழுதியுள்ள கடிதத்தில், "வாக்கு எண்ணும் மையத்தில், கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதுவும் அதற்கான பட்டியலை சம்பந்தப்பட்ட கட்சி தலைமை ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இது இப்படியிருக்க, 48 மணிநேரத்திற்கு முன் கரோனா தொற்று இல்லை என அம்முகவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
கரோனா இல்லை என்று 48 மணிநேரத்திற்கு முன்பாக மே 2ஆம் தேதி வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லும் கட்சி முகவர்கள் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள அதே தேர்தல் ஆணையம்தான், ஏப்ரல் 29ஆம் தேதியன்று முகவர்களின் இறுதிப் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது எப்படி சாத்தியமாகும்” எனத் திருணமூல் காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.