ETV Bharat / bharat

திருப்பதி கோயிலில் கடுமையாக்கப்பட்ட கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - திருப்பதி கோயில்

திருப்பதி கோயிலில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன.

திருப்பதி கோயிலில் கடுமையாக்கப்பட்ட கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள்

author img

By

Published : Apr 19, 2021, 3:59 PM IST

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் கரோனா இரண்டாவது அலையில் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சித்தூர் இருந்துவருகிறது. இதனால், திருப்பதி கோயிலுக்கு பக்தர்களின் வருகையும் குறையத் தொடங்கியுள்ளது. திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு ஆன்லைனில், பதிவுசெய்த பிறமாநிலத்தவர்களில் பலர், தங்களது டிக்கெட்டுகளை ரத்துசெய்துள்ளனர்.

இந்நிலையில், மாநில அரசின் அறிவுரையை ஏற்று திருப்பதி கோயிலில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளது திருப்பதி தேவஸ்தானம். அதன்படி, திருப்பதி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உடல் உஷ்ணம் உணர்த்தும் கருவியின் மூலம் சோதிக்கப்பட்டு, அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், கோயில்களுக்கு வரும் வாகனங்கள் மீது கிருமிநாசினியும் தெளிக்கப்படுகிறது. இந்தக் கரோனா கட்டுப்பாடு வழிமுறைகள் தங்களுக்கு திருப்தியளிப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, பக்தர்கள் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும், உடல்கோளாறுகள் உள்ளவர்கள் கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

மே மாதம் முதல் நாளொன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்களை மட்டும் சாமி தரிசனம்செய்ய அனுமதிக்கவுள்ள தேவஸ்தானம், அதற்கான டிக்கெட் விநியோகத்தை ஏப்ரல் 20ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு 3 கிலோ தங்க காணிக்கை கொடுத்த தேனி பக்தர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.