ஏர் இந்தியா பெண் விமானிகள் குழுவினர், உலகின் மீக நீளமான பாதையில் விமானத்தை இயக்கி சாதனைபுரிந்துள்ளனர். சான் ஃபிரான்சிஸ்கோவில் தொடங்கிய விமானம், நாளை (ஜன. 09) பெங்களூரு வந்தடைகிறது. இதன் தூரம் சுமார் 16 ஆயிரம் கிமீ எனக் கணக்கிட்டுள்ளனர்.
இது குறித்து ஏர்இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பாதையில் விமானத்தை இயக்குவது மிகவும் சவாலானது ஆகும். இதற்கு, விமான நிறுவனங்கள் சிறந்த, அனுபவமிக்க விமானிகளை இந்த வழியில் அனுப்புகின்றன.
ஆனால், இந்த முறை சான் ஃபிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூருவுக்குப் பயணம் செய்வதற்கான திட்டத்தை பெண் கேப்டனான சோயா அகர்வாலுக்கு நாங்கள் வழங்கியுள்ளோம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
சோயா அகர்வால் குழுவினர் பெங்களூருவில் விமானத்தை தரையிறக்கி சாதனை ஒன்றை புரிய உள்ளனர்.